மூடுக

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

முக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்:

அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில் :

வருடாந்திர பிரம்மோற்ஸவம் பங்குனி மதத்தில் (மார்ச் – ஏப்ரல்) மிகக் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எறிபத்த நாயனார் உற்சவம், நவராத்திரி (செப்டம்பர் மாதம்) மற்றும் ஆருத்ர தரிசனம் (ஜனவரி மாதம்) போன்றவையும். மிகக் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில்:

இக்கோயிலில் புராட்டசி (செப்டம்பர்-அக்டோபர்) உற்சவ திருவிழா 22 நாட்களுக்கு மிக்ச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பெருமாள் அன்னபக்ஷி வாகனம், சிம்ம வாகனம், ஹனும‌ந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு செல்கிறார். இந்த உற்சவத்தில், தேர் திருவிழா புரட்டாசி திருவோண நட்சத்திரத்தில் நடைபெறும். புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும், தரிசனம் வெகு அதிகாலையில் தொடங்குகிறது, கூடுதலாக சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜை நடக்கும். இந்த பூஜையில் நேரு சதாசிவ பிரம்மேந்திரர் கலந்துகொள்வார் என்று ஒரு நம்பிக்கை.

அருள்மிகு மாரியம்மன் கோயில் :

ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் (ஏப்ரல்-மே), “வைகாசி” உற்சவம் 21 நாட்களுக்கு கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அமராவதி நதிக்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா வெகுச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின் இறுதியாக நடைபெறும் வானவேடிக்கைகளின் கண்கவர் காட்சியமைப்பை, அமராவதி ஆற்றங்கரையில் இருந்து பார்க்கும் போது வெகு அழகாக காட்சியளிக்கும்.

ஆடிப்பெருக்கு:

தமிழர்களின் முக்கிய திருவிழாவான ஆடிப்பெருக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் 18-ம் நாள் (ஜூலை-ஆகஸ்ட்) மாவட்டத்தின் காவிரி கரையோரங்களில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.