மூடுக

மாவட்டம் பற்றி

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் வட்டம் 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண்.683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள்.25.07.1996 இன்படி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், கிழக்கே திருச்சிராப்பள்ளி, மேற்கே ஈரோடு ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இரு கோட்டங்களையும், கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய ஆறு வட்டங்களையும், 203 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : கரூர்
தலையகம் : கரூர்
மாநிலம் : தமிழ்நாடு

பரப்பளவு :
மொத்தம் : 2895.57 ச.கி.மீ
ஊரகம் : 2620.50 ச.கி.மீ
நகர்புறம் : 283.50 ச.கி.மீ

மக்கள் தொகை :
மொத்தம் : 9,33,791
ஆண்கள் : 4,64,489
பெண்கள் : 4,69,302

புகைப்பட தொகுப்பு