மூடுக

அடைவது எப்படி

வான் வழி :

கரூர் நகரத்திலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 78 கி.மீ, கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 128 கி.மீ, மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையம் 158 கி.மீ தொலைவிலும் உள்ளது.

தொடர்வண்டி வழி :

கரூர் இரயில் நிலையம் (நிலைய குறியீடு – KRR) சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. இது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், சேலம், எர்ணாகுளம், மைசூர், மங்களூர் மற்றும் பல முக்கியமான நகரங்களை இணைக்கிறது.

சாலை வழி :

இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் எண் NH 44 NS (வாரணாசி – கன்னியாகுமரி சாலை) மற்றும் NH 81 (கோயம்புத்தூர் – சிதம்பரம் சாலை) கரூர் மாவட்டம் வழியாக செல்கிறது. மேலும் மாநில நெடுஞ்சாலைகள் ஈரோடு, தாராபுரம் போன்ற நகரங்களை இணைக்கிறது. கரூர் பேருந்து நிலையம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. கரூர் நகரத்திலிருந்து சென்னை, பெங்களுரு, திருப்பதி, திருச்செந்தூர், இராமேஸ்வரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.