மூடுக

கருவூலம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மாவட்டக் கருவூலம், கரூர்

கருவூலம் மற்றும் கணக்குத் துறை 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை நிதித்துறையின் கீழ் தனி இயக்குநரகமாக செயல்படுத்தி அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

செயல்பாடுகள்:

  1. கருவூலம் என்பது அரசின் கஜானாவாக செயல்பட்டுவருகிறது.
  2. இதன் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பின்னர் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக செயல்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. அரசின் அனைத்து வரவு செலவுகள் துல்லியமாக கணக்கிட்டு துறைவாரியாகவும் மாவட்ட வாரியாகவும் மாநில கணக்காயருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது கருவூலத் துறையின் செயல்பாடுகள். அரசு தொடர்புடைய பிறதுறை அனைத்து பரிவர்த்தனைகளும் பட்டியல் / செலுத்துச்சீட்டுகள் மூலமாக கருவூலம் மூலம் வங்கிக்கு அனுப்பப்படும்.
  3. அரசு அலுவலகங்களில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குதல் கருவூலத்தின் பணியாகும்.
  4. உள்ளாட்சி அரசு நிறுவனங்களின் வைப்புத் தொகை (Deposits) மற்றும் செலவினங்கள் தொடர்பான கணக்கு பராமரித்தல்.
  5. நீதி மன்ற மற்றும் நீதி சாரா முத்திரை தாட்கள், முத்திரைகள் அரசு அங்கீகாரம் பெற்ற முத்திரை தாள் விற்பணையாளர்களுக்கு விற்பனை செய்தல், மாநில தேவைக்கு உண்டான முத்திரை தாட்கள் கொள்முதல் செய்து சேம பாதுகாப்பில் வைத்தல் ஆகியவை கருவூலத்தின் முக்கிய பணியாகும்.

தொடர்பு விபரம்:

பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி
கருவூல அலுவலர், கரூர் 04324-257587,
7373094140
dtokar[dot]tndta@nic[dot]in மாவட்டக் கருவூலம், கரூர்
உதவிக் கருவூல அலுவலர், கரூர் 04324-260005,
7373094144
stokar01[dot]tndta@nic[dot]in சார்நிலைக் கருவூலம், கரூர்
உதவிக் கருவூல அலுவலர், அரவக்குறிச்சி 04320-231618,
7373094143
stokar03[dot]tndta@nic[dot]in சார்நிலைக் கருவூலம், அரவக்குறிச்சி
உதவிக் கருவூல அலுவலர், குளித்தலை 04323-223444,
7373094142
stokar02[dot]tndta@nic[dot]in சார்நிலைக் கருவூலம், குளித்தலை
உதவிக் கருவூல அலுவலர், கிருஷ்ணராயபுரம் 04323-243622,
7373094622
stokar04[dot]tndta@nic[dot]in சார்நிலைக் கருவூலம், கிருஷ்ணராயபுரம்
உதவிக் கருவூல அலுவலர், கடவூர் 04323-251233,
7373094623
stokar05[dot]tndta@nic[dot]in சார்நிலைக் கருவூலம், கடவூர்