மூடுக

பள்ளிக் கல்வி

முன்னுரை

கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்து செல்லும் கருவி எனலாம். கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் தன்மையுடையது. கல்வி மனிதர்களுக்கு உலகம் பற்றிய அறிவை கொடுக்கிறது. கல்வியறிவு ஒருவருக்கு சரியான கண்ணோட்டத்தில் தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனை அளிக்கிறது.

நோக்கங்கள்:

  1. உலகளாவிய அணுகல், சமபங்கு, தரம் முதன்மையான, மேல் முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் உயர்நிலை நிலைகளில் வழங்குதல்
  2. அரசியலமைப்பிற்குட்பட்டு பாடத்திட்டத்தையும் மதிப்பீடு நடைமுறைகளையும் மேம்படுத்துதல்.
  3. குழந்தையின் அறிவு, திறமை மற்றும் குழந்தையின் உடல் மற்றும் மன திறன்களை முழுவதுமாக வளர்ப்பது.
  4. கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகள் முறைகள் மூலம் குழந்தைக்கு இணக்கமான முறையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  5. குழந்தைகளுக்கு ஆண்டுத் தேர்வுகளால் ஏற்படுகின்ற பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அகற்றுவதற்காக, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வகுப்பறை வாழ்க்கையில் தேர்வுகள் மிகவும் நெகிழ்வானதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் ஆக்குதல்.

திட்டங்கள்:

அனைவருக்கும் கல்வி இயக்கம்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான்) [SSA] என்பது அடிப்படை கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்.

  1. 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் பாலின வகை மற்றும் சமூக வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்தல்.
  2. 100 விழுக்காடு மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்துதல்.
  3. பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேறாமல் தக்க வைத்தல்.
  4. அனைத்து பள்ளிகளிலும் தரமான அடிப்படை கல்வியினை வழங்குதல்.
  5. நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கும் பள்ளிகளில் உள்ளடங்கிய கல்வியினை வழங்குதல்.
  6. அனைத்துப் பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தரமான கல்வியினை வழங்குதல்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்:

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (இராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷ்ய அபியான்) [RMSA] என்பது அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வியினை அளிப்பதன் மூலம் தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பட்டினை எட்ட முடியும் என்ற நோக்கிலும், 5 கி.மீ.சுற்றளவிற்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியை அமைப்பதன் மூலம் இடைநிலை வகுப்புகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையையும், மேல்நிலைக் கல்வியில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையினையும் உறுதிப்படுத்த முடியும் என்ற நோக்கிலும் 2009-ஆம் ஆண்டு முதல் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் இடைநிலைக் கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிப்பதன் மூலம் மூலம் பாலின வகை மற்றும் சமூக வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்யவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

குறிக்கோள்கள்:

  1. 14-18 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நல்ல தரமான கல்வி கிடைத்தல்.
  2. ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு நியாயமான தூரத்தில் அதாவது 5 கிலோ மீட்டல் சுற்றளவிற்குள் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைத்து ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர் சேர்க்கையினை மேம்படுத்துதல் மற்றும் 7 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மேல்நிலைப் பள்ளிகளை அமைப்பதன் மூலம் மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் மேம்படுத்துதல்.
  3. அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் பரிந்துரைக்கப்பட்ட / நிலையான நெறிமுறைகளின்படி கல்வி தரத்தை மேம்படுத்துதல்.
  4. இடைநிலைக் கல்வி பெறுவதற்கு சமூக, பொருளாதார மற்றும் பாலின தடைகளை அகற்றதல்.
  5. 2020 ஆம் ஆண்டிற்குள் 14-18 வயதிற்குட்பட்டவர்கள் 100 விழுக்காடு இடைநிலைக் கல்வியினை பெறுதல்.
  6. ஒவ்வொரு உயர்நிலை பள்ளிகளுக்கும் கற்பித்தல் பணிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பணியமர்த்துதல்.
  7. அனைத்து மாணவர்களும் நல்ல தரமன இடைநிலைக் கல்வியை தொடர வைத்தல்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

கரூர் மாவட்டத்தில் 133 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழை நிலை வகுப்பில் 6840 இடங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1) (C) இன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழைநிலை வகுப்புகளில் 6840 இடங்களில் 25 விழுக்காடான 1759 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நலத்திட்டங்கள் (பள்ளிக் கல்வி)

வரிசை எண் திட்டங்கள் பயனாளிகள் 2016-2017 ஆண்டில் அளிக்கப்பட்டவை 2017- 2018 ஆண்டில் அளிக்கப்பட்டவை
1 விலையில்லா பாடப் புத்தகங்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 197159 328310
2 விலையில்லா பாட குறிப்பேடுகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 378153 1126751
3 விலையில்லா மடிக்கணினி 12-ம் வகுப்பு மாணவர்கள் 6644 6610
(வழங்கப்பட உள்ளது)
4 விலையில்லா புத்தகப் பைகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 115015 110518
5 விலையில்லா சீருடைகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 18047 15595
6 விலையில்லா காலணிகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 113927 110909
7 விலையில்லா பேருந்து பயண அட்டை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 26802 23625
8 விலையில்லா மிதி வண்டிகள் 11-ம் வகுப்பு மாணவர்கள் 7796 6763
9 விலையில்லா கிரையான்கள் 1 முதல் 2 ஆம் வகுப்பு வரை 16102 14878
10 விலையில்லா வண்ண பென்சில்கள் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 25319 15112
11 விலையில்லா ஜியோமெட்ரிக் பெட்டிகள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 11867 9116
12 விலையில்லா புவியியல் வரைபடங்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 23495 7416
13 இடைநிற்றலை தடுப்பதற்கான ஊக்கத் தொகை 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு 24347 6610
14 வருவாய் ஈட்டும் பெற்றோர் நிரந்தர ஊனமுற்றாலோ / இறந்தாலோ வழங்கப்படும் உதவித் தொகை. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 13 10

நிர்வாக வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை

நிர்வாக வகை தொடக்கப் பள்ளிகள் இடை நிலைப்  பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகள் மொத்தம்
பள்ளிக் கல்வித் துறை 3 0 48 51 102
ஆதி திராவிடர் நலத் துறை 17 2 6 2 27
அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் 39 6 5 10 60
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 86 1 4 13 104
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 0 0 29 28 57
மத்திய அரசின் வாரியப் பள்ளிகள் 0 0 11 2 13
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் 516 161 0 0 677
நகராட்சிப் பள்ளிகள் 5 4 2 2 13
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா 0 1 0 0 1
மொத்தம் 666 175 105 108 1054

அலுவலர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள்:

பதவி தொலை பேசி எண் கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி
முதன்மைக் கல்வி அலுவலர், கரூர். 04324 255805 7373002711 ceo[dot]tnkar@nic[dot]in
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
அனைவருக்கும் கல்வி இயக்கம், கரூர்.
9788858700 ssa_karur@yahoo[dot]co[dot]in
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், கரூர். 9750982534 deeokarur@gmail[dot]com
மாவட்டக் கல்வி அலுவலர், கரூர். 04324 255145 7373002713 deokar@nic[dot]in
மாவட்டத் திட்ட அலுவலர்,
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், கரூர்.
7373002711 (CEO)
7373002712 (ADPC)
rmsakaru@gmail[dot]com
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், கருர். 9894935851 dipekarur@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கரூர் வட்டாரம். 9750982527,
9750982520
aaeeokarur@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், தாந்தோணி வட்டாரம். 9750982526,
9750982523
aeeothantoni@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், க.பரமத்தி வட்டாரம் 6750982533,
9750982522
paramathiaeeo@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், அரவக்குறிச்சி வட்டாரம். 9750982535,
9750982524
aeeoaravakurichi@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்,
கிருஷ்ணராயபுரம் வட்டாரம்.
9750982532,
9750982528
aeeokrpuram@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குளித்தலை வட்டாரம். 9750982529, aeeokulitalai@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தோகைமலை வட்டாரம். 9750982525 aeeothogai@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கடவூர் வட்டாரம். 9750982530,
9750982531
kadavuraeeo123@gmail[dot]com
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (அறிவியல்), கரூர். 9750982521 deeokarur@gmail[dot]com