மூடுக

சமூக பாதுகாப்புத் திட்டம்

செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் விவரங்கள்

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டங்கள்

முதியோர் மற்றும் இதர ஓய்வூதியத் திட்டங்கள்
வ.எண் திட்டத்தின் பெயர் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள்
1 இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
 3. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
2 இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்
 2. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 3. 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 4. விதவையாக இருத்தல் வேண்டும்.
3 இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 3. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 4. ஊனம் நிலை 60 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
4 ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 3. ஊனம் நிலை 40 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
5 ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 3. விதவையாக இருத்தல் வேண்டும்
6 ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 3. சட்டப் பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் இருந்து சட்டப் பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 3. திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.
8 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
 1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
 2. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
 3. நிலமற்ற விவசாய தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.
9 நலிந்தோர் நலத்திட்டம்
 1. உழவர் அட்டை இல்லாத குடும்பத் தலைவர் இறந்தால் இத்திட்டத்தின் மூலம் ரூ.20,000/- வழங்கப்படுகிறது.
 2. 60 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் அட்டை பெற்றவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்
வ.எண் திட்டத்தின் பெயர் தகுதிகள்
1 கல்வி உதவித் தொகை தொழிற்பயிற்சி மற்றும் பல்தொழில் நுட்ப பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. உதவித் தொகை பெற கல்விச் சான்று மற்றும் உழவர் அட்டை, சாதிச் சான்று மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.
2 விபத்து மரணம் விபத்து மரணம் – மெருன் அட்டை பெற்ற உறுப்பினர்கள் இறந்தால் (கணவன் / மனைவி) நிவாரணம் வழங்கப்படும்.
3 திருமண உதவித் தொகை உறுப்பினர்களின் குழந்தைகள் மற்றும் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
4 இயற்கை மரணம் நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை இயற்கை மரணம் நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை (மெருன் அட்டை பெற்ற உறுப்பினர்கள் இறந்தால் கணவன் / மனைவி) நிவாரணம் வழங்கப்படும்.
5 முதியோர் உதவித் தொகை உழவர் அட்டை உள்ள பயனாளிகளுக்கு உழைக்கும் திறனற்ற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.
6 புற்றுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட உழவர் அட்டை உள்ள உறுப்பினர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த அனாதை குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டங்களில் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் விவரம்:-

மாவட்ட தொடர்பு அலுவலர்:

பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
தனித்துணை ஆட்சியர்,
சமூக பாதுகாப்புத் திட்டம்.
sdcssskar@gmail[dot]com தனித்துணை ஆட்சியர்,
சமூக பாதுகாப்புத் திட்டம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கரூர் – 639007.

வட்ட தொடர்பு அலுவலர்கள்:

வட்டம் பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
அரவக்குறிச்சி தனி வட்டாட்சியர் aravakurichidrs@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், அரவக்குறிச்சி.
கரூர் தனி வட்டாட்சியர் karurdrs@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், கரூர்.
மண்மங்கலம் தனி வட்டாட்சியர் crcrhr@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், மண்மங்கலம்.
கிருஷ்ணராயபுரம் தனி வட்டாட்சியர் spltahsildarkrp@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், கிருஷ்ணராயபுரம்.
குளித்தலை தனி வட்டாட்சியர் kulithalaiss@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், குளித்தலை.
கடவூர் தனி வட்டாட்சியர் kulithalaiss@gmail[dot]com தனி வட்டாட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம்,
வட்ட அலுவலகம், கடவூர்.