மூடுக

வட்டார போக்குவரத்து அலுவலகம்

கரூர்

கரூர் மாவட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கரூர் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் மண்மங்கலம் ஆகிய இடங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும், பொதுமக்களின் வசதிக்காக இயங்கி வருகின்றன. இவ்வலுவலகங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 10,200 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ஒரு மாதத்தில் சுமார் 2500 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:

 • பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
 • இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
 • தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
 • தேசிய போக்குவரத்து ஊர்தி அனுமதி, போக்குவரத்து ஊர்தி அனுமதி , ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா , ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
 • சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல்.
 • அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
 • ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
 • மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.

சேவைகளை பெறுவதற்கான நடைமுறைகள் :

 • ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நடத்துநர் உரிமங்கள் –   http://parivahan.gov.in/parivahan/
 • புதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை –   http://tnsta.gov.in/transport/
 • வாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம் –   http://tn.gov.in/sta/

தொடர்பு விபரம்:

பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,
கரூர்
04324 – 255099 rtotn47@nic[dot]in வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,
தாந்தோனிமலை ரோடு,
மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்,
கரூர் மாவட்டம் – 639007
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, 
பகுதி அலுவலகம், குளித்தலை
04324 – 245588 rtotn47z@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,
சத்தியமங்கலம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் – 639104
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, 
பகுதி அலுவலகம், அரவக்குறிச்சி
04320 – 230456 rtotn47y@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், 
5, கரூர் மெயின்ரோடு,
அரவக்குறிச்சி வட்டம்,
கரூர் மாவட்டம் – 639201
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, 
பகுதி அலுவலகம், மண்மங்கலம்
04324 – 288477 rtot47x@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,
சேலம் பைபாஸ் ரோடு, மண்மங்கலம் வட்டம்,
கரூர் மாவட்டம் – 639006