மூடுக

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. கரூர் மாவட்டம் 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது. இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அளவிலான அலுவலர்கள், வங்கி மேலாளர், ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக்குழு காலாண்டுக்கு ஒரு முறை கூடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (PDF 243 KB)
 • பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம் (ஊரகம்) (PDF 177 KB)
 • முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் (PDF 193 KB)
 • பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித்திட்டம் (PDF 160 KB)
 • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் (PDF 144 KB)
 • பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் (PDF 241 KB)
 • தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PDF 303 KB)
 • நபார்டு திட்டம் (PDF 170 KB)
 • தன்னிறைவுத் திட்டம் (PDF 99 KB)
 • தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) (PDF 215 KB)
 • தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத்திட்டம் (தாய்-II) (PDF 226 KB)
 • அம்மா பூங்கா (PDF 225 KB)
 • அம்மா உடற்பயிற்சி கூடம் (PDF 90 KB)