மூடுக

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை

செயல்பாடுகள்

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு, ஆராய்ச்சி உதவியுடன், விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின் முழு ஈடுபாட்டுடன் பல்வேறு பயிர்களில் நவீன உத்திகளை அதிக பரப்பளவில் கடைபிடித்து, விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இரண்டாம் பசுமைப் புரட்சிக்கான உத்திகள்

  • உற்பத்தித் திறனில் உள்ள இடைவெளியை குறைக்க பயிர் வாரியான உத்திகள், வேளாண் விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் தொழில்களில் விவசாயிகளின் பங்கேற்பை ஊக்கப்படுத்துதல்.
  • சாகுபடி பரப்பை அதிகரித்து, அதிக வருவாய் தரும் தோட்டக்கலை மற்றும் வணிகப் பயிர்களை மாற்றுப் பயிராக சாகுபடி செய்வதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினையும் உறுதி செய்தல்.
  • மண் வள மேம்பாடு
  • பாசன நீர் உபயோகத்திறனை மேம்படுத்த உயர் தொழில்நுட்ப வேளாண்மை, துல்லிய பண்ணையம் மற்றும் நுண்ணீர் பாசனத்தை பரவலாக்குதல்.
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவையை வலுப்படுத்துதல் – பண்ணை அளவிலான உத்திகள் மூலம் விரிவாக்கப் பணியாளர்கள் ஒவ்வொரு விவசாயிகளுடனும் உள்ள தொடர்பை வலுப்படுத்துதல்.

மண்வகைகள் :

கரூர் மாவட்டத்தில் இருகூர் மற்றும் துலுக்கனூர் வகையைச் சேர்ந்த செம்மண் மண்பிரிவுகள் அதிகளவில் காணப்படுகிறது. இருகூர் வகை செம்மண் பிரிவு அமில தன்மை மற்றும் இயல்பான தன்மை கொண்டுள்ளது. சுண்ணாம்பு சத்து குறைவாகவும், நீரினை நன்கு உறிஞ்சும் தன்மை உடையதாகும். துலுக்கனூர் வகை செம்மண் பிரிவு கரிசல் மண் கலந்த கலவையாக காணப்படுகிறது. சுண்ணாம்பு சத்து மற்றும் நீரினை நன்கு உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பல்லடம், பாலவிடுதி, பாலத்துறை மற்றும் வண்ணாபட்டி வகை சேர்ந்த செம்மண் மண் பிரிவுகள் காணப்படுகிறது.

மழையளவு விவரம் :

கரூர் மாவட்டத்தில் இயல்பான சராசரி மழையளவு 652.2.மி.மீ ஆகும். இதில் அதிகப்படியான மழை வடகிழக்கு பருவ மழையினால் கிடைக்கப்பெறுகிறது.

நீர்வளம் :

கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்ட பகுதிகள் அமராவதி மற்றும் காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. அரவக்குறிச்சி வட்ட பகுதிகள் அமராவதி மற்றும் கீழ்பவானி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்ட பகுதிகள் காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. கடவூர் வட்ட பகுதிகள் ஏரிகள் மற்றும் கிணறுகள் மூலம் பயன்பெறுகின்றன.

பயிர் சாகுபடி முறைகள் :

கரூர் மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்து, கரும்பு மற்றும் வாழை பயிர்கள் முதன்மை பயிர்களாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்ட பகுதிகளில் நெல் பிரதானப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பயறு வகைப் பயிர்கள் நெல் அறுவடைக்குப் பின்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது. நன்செய் மற்றும் மானாவாரி நிலங்களில் சிறுதானியப் பயிர்களான சோளம், கம்பு, பயறு வகைப் பயிர்களான துவரை, உளுந்து, கொள்ளு, எண்ணெய்வித்து பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

துறைகளின் விவரங்கள்

துறை இணைப்பு
விவசாயத் துறை சொடுக்குக (PDF 286 KB)

முக்கிய இணைப்புகள்: