மூடுக

நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – கரூர் மாவட்டம்

வரிசை எண் பொருள் இணைப்பு
1 நெகிழி மாசு சொடுக்குக
2 நெகிழி மாசின் பாதிப்புகள் சொடுக்குக
3 நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் தீர்வுகள் சொடுக்குக
4 நெகிழித் தடை தொடர்பான அரசாணைகள் சொடுக்குக
5 நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – கரூர் மாவட்டம் சொடுக்குக
6 நெகிழிக் கழிவு மேலாண்மை செயல் திட்டம் – கரூர் நகராட்சி (PDF 247 KB)
7 நெகிழித் தடை தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் சொடுக்குக
8 நெகிழி இல்லா இலக்கில் உணவு வணிகர்களின் பங்கு (PDF 37 KB)
9 நெகிழித் தடை தொடர்பான செய்தி வெளியீடு (PDF 29 KB)

 

 

 

 

 

 

Plastic Pollution.

நெகிழி மாசுபாடு காட்சி

நெகிழி மாசு என்றால் என்ன?

உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குப்பைகளின் அளவும் அதற்கேற்றால்போல் அதிகரிக்கிறது. நவீன வாழ்க்கைமுறை மக்களை இலகுவாக தூக்கி எறியக்கூடிய பொருள்களான தண்ணீர் மற்றும் குளிர்பான குடுவைகள் ஆகியவற்றை அதிக அளவில் குப்பைகளாக உற்பத்தி செய்கின்றது. இதன்மூலம் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுத்தப்படுகிறது. நெகிழியில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதால் இதன்மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் அதிக மாசடைகிறது.

அதிக அளவில் நெகிழிக்கழிவுகள் குறிப்பிட்ட இடத்தில் சேர்வது சுற்றுச்சூழலையும் , தாவரங்களையும் , வனவிலங்குகளையும் மற்றும் பொது மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்குகிறது. நெகிழியின் பயன்பாடு அதன்நீண்ட நாள் பயன்பாட்டிற்கு வழிவகுத்தாலும், அது எளிதில் மக்குவதில்லை.

 • நெகிழி மாசின் காரணங்கள்

 • நெகிழியினால் ஏற்படும் பிரச்சனைகள் வெறும் குடுவைகளை சுத்தம் செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதால் மட்டும் தீர்வாகாது. அது சூழ்நிலைக்கு ஏற்ப வடிவெடுக்கிறது.

 • பழமையான குப்பைசேகரிக்கும் கிடங்கு

 • நெகிழிகள் எல்லாஇடத்திலும் பரவலாக காணப்படுகிறது. வெறும் தண்ணீர் குடுவைகளும் மற்றும் பால் கொண்டு செல்ல பயன்படும்நெகிழி பைகள் கூட சிறிய அளவில் சூழல் மாறுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. குப்பை கிடங்குகள் மற்றும் குப்பைகளால் ஆன நில மூடல்கள் பெரிய அளவில் வனவிலங்குகளுக்கும் , நிலத்திற்கும் மற்றும் நிலத்தடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

 • அதிக பயன்பாடு

 • நெகிழிகள் சந்தைகளில் மலிவாக கிடைப்பதால் அவைஅதீத அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது. முறையாக அப்புறப்படுத்தாத நெகிழிகள் நிலத்தை மாசுபடுத்துவதும், எறியூட்டப்படும்போது காற்றை மாசுப்படுத்துவதும் நடைமுறை சிரமங்கள்.

 • மீன்பிடி வலைகள்

 • உலகெங்கும் மீனை உணவாக எடுத்துக் கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் மீன்பிடி தொழில் பரவலாக செய்யப்படும் பிரதான தொழில். மேற்படி தொழிலுக்கு நெகிழிகளால் ஆன வலைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிக ஆண்டுகள் அவை உழைத்தாலும் அவைகளின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மற்றும் கடல்சார் சூழலுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

 • நெகிழிகள் மற்றும் பிற குப்பைகளை அப்புறப்படுத்துதல்

 • நெகிழியின் ஆயுட்காலம் அதிக ஆண்டுகள் என்பதால் அவை மக்குவதற்கு நீண்ட காலம் ஆகிறது. அதனைமண்ணில் புதைத்தாலும் அதன் நச்சுத்தன்மை மாறுவதில்லை. அதேபோல் மறுசூழற்சி செய்தாலும் நச்சுத்தன்மை குறைவதில்லை.

  *****

 

 

 

 

 

 

நெகிழி மாசின் பாதிப்புகள்

நெகிழிகள் குறைந்த அளவாயினும் அவைகளால் ஏற்படும் பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும். கீழ்க்கண்ட சில பாதிப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.

 • உணவு சங்கிலி மாறுபாடுகள்

 • மிக நுண்ணிய அளவில்கூட நெகிழி காணப்படுவதால் பிளாங்டன் உள்ளிட்ட நுண்ணுயிர்கள்சுட அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் அதiiச் சார்ந்துள்ள பெரு விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்த உணவுசங்கிலி அறுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 • நிலத்தடி நீர் மாசுபாடு

 • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது என்பது உலகளவில் இன்று கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குப்பைகளை சேகரிக்கும் இடங்களில் ஊடுருவும் மழைநீரின் மூலம் நிலத்தடிநீர் அதிக மாசடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

 • நிலம் மாசுபாடு

 • நெகிழிகள் நிலமூடல்களில் நிரப்படும் பொழுது, மழைக்காலங்களில் ஊடுருவும் நீரோடு வேதிவினைகள் புரிந்து உயிருக்கு ஆபத்தான நச்சுப் பொருள்கள் வெளிப்பட்டு அது ஏதுவான இடங்களில் தங்கி உயிரினங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 • காற்று மாசுபாடு

 • வெட்டவெளிகளில் எறியூட்டப்படும் நெகிழிகள் வெளிப்படுத்தும் நச்சு வாயுக்கள் மனிதர்களாலும் ,விலங்குகளாலும் சுவாசிக்கப்படும்போது சுவாசக்கோளாறுகள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

 • உயிருக்கு ஆபத்தானது

 • நெகிழி என்பது மனிதர்களால் பல்வேறு வேதிப்பொருள்களை மூலப்பொருளாக கொண்டு செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். எனவே நெகிழிகளை உற்பத்தி செய்வது, சேகரித்து வைப்பது , அப்புறப்படுத்துவது மற்றும் அவைகளோடு அதிக அளவில் செயல்படுவது ஆபத்துக்களை விளைவிக்கும்.

 • அதிக செலவீடு

 • குப்பைகளின் மூலம் உலகந்தோரும் அதிகஅளவில் செலவினங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவர கணக்குகள் தெரிவிக்கின்றன. குப்பைகளை அப்புறப்படுத்த உரிய இடத்தை தேர்வு செய்வது முதல் அப்புறப்படுத்துதல் வரை ஆகும் செலவு அதிகம். மேலும் குப்பைகள் அதிகரிப்பதன் மூலம் சுற்றுலாக்கள் குறைந்து அதன்மூலம் அரசுகளுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  *****

 

 

 

 

 

 

 

 

 

 

நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் தீர்வுகள்

 • பொருட்களை வாங்குபோது கடைப்பிடிக்க வேண்டியது

 • நவீன உலகில் மக்கள் நெகிழி பொருள்களால் ஆன பைகளை பொருட்களை வாங்க அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் நெகிழிக் குப்பைகளின் அளவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக சணல் மற்றும் துணி போன்ற எளிதில் மக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

 • தண்ணீர் குடுவைகளுக்கு மாற்று ஏற்பாடு

 • பொதுமக்கள் தங்களின் தாகத்தை தீர்த்துக்கொள்ள எப்போதும் தங்கள் கையிருப்பிலேயே தண்ணீர் குடுவைகளை வைத்திருக்கும் பழக்கம் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக் கோப்பைகளை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் குப்பைகளின் அளவுகள் நாள்தோறும் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடுவைகள்,உலோகங்கள் மற்றும் மண்பாண்டங்கள்ஆகியவற்றில் செய்யப்பட்ட குடுவைகளை பயன்படுத்தலாம்.

 • வியாபாரிகளுக்கு நெகிழிக்கு மாற்றாக பொருட்களை பயன்படுத்த, விநியோகிக்க அறிவுறுத்தல்

 • உள்ளூர் உணவு விடுதிகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கும் நெகிழிக்கு மாற்றாக இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய மூங்கிலால் ஆன கோப்பைகள் மற்றும் தட்டுக்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.

  *****

 

 

 

 

 

 

நெகிழித் தடை தொடர்பான அரசாணைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – கரூர் மாவட்டம்

தமிழ்நாடு அரசு, ஜனவரி 2019-இல் இருந்து நெகிழி பொருட்களுக்கு தடை விதித்துள்ளது

நம்மால் முடியும் : நெகிழி கழிவுகளற்ற கரூர் மாவட்டமாக.

தங்கள் பங்களிப்பினால் நெகிழி மூலம் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கலாம்.
நாம் இணைந்து செயல்படுவோம்.

தங்கள் ஒத்துழைப்பினால் நெகிழி மாசுபாட்டை எதிர்த்து போராடி ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்.

*****