மூடுக

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை

பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்

திட்டம் 1:

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ. 50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

திட்டம் 2:

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத்தொகை தலா. ரூ.25000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

திருமண நிதியுதவி திட்டம்

ஏழை பெற்றோர்களின் பெண்கள், விதவையரின் மகள்,ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோருக்கு உதவிடும் வகையில், கீழ்க்கண்டவாறு தமிழக அரசால் ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுதப்பட்டு வருகின்றன.

  1. மூவலுர் இராமாமிர்த் அம்மையார் நினைவு திருமணநிதி உதவித் திட்டம்
  2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம்.
  3. ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
  4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித்திட்டம்
  5. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம்.

அனைத்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், பட்டதாரி அல்லாதவாகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம்(22 காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.25,000/-மும், பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (22காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.50,000/-மும் 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 கிராம் தங்கமானது 23.05.2016 முதல் 8 கிராம் (22 காரட்) தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விபரங்கள் – பதிவிறக்கம் (PDF 91 KB)

தொடர்பு விபரங்கள்

வ. எண் பதவி தொலைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரி
1 மாவட்ட சமூகநல அலுவலர் 04324 – 255009 மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர்
2 பாதுகாப்பு அலுவலர் 04324 – 255009 மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர்
3 விரிவாக்க அலுவலர் /  மகளிர் ஊர்நல அலுவலர் 04323 – 222155 வட்டார வளர்ச்சி அலுவலகம், குளித்தலை
4 விரிவாக்க அலுவலர் /  மகளிர் ஊர்நல அலுவலர் 04323 – 252240 வட்டாரா வளர்ச்சி அலுவலகம், தோகைமலை
5 மகளிர் ஊர்நல அலுவலர் 04323 – 243321 வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணராயபுரம்,
6 விரிவாக்க அலுவலர் /  மகளிர் ஊர்நல அலுவலர் 04324 – 220548 வட்டாரா வளர்ச்சி அலுவலகம்,கரூர்
7 மகளிர் ஊர்நல அலுவலர் 04324 – 257355 வட்டாரா வளர்ச்சி அலுவலகம், தாந்தோணி
8 விரிவாக்க அலுவலர் /  மகளிர் ஊர்நல அலுவலர் 04320 – 230028 வட்டாரா வளர்ச்சி அலுவலகம், அரவக்குறிச்சி
9 விரிவாக்க அலுவலர் 04323 – 251224 வட்டாரா வளர்ச்சி அலுவலகம், கடவூர்
10 விரிவாக்க அலுவலர் /  மகளிர் ஊர்நல அலுவலர் 04324 – 283329 வட்டாரா வளர்ச்சி அலுவலகம், க.பரமத்தி