மூடுக

அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்

வழிகாட்டுதல்

கரூர் மாவட்டத்தில், கரூர் – திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் ஜீவ சமாதியும், அதற்கு முன்புறம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இந்த ஜீவ சமாதி காவிரிக் கரையில் ஒரு சோலையில் அமைந்துள்ளது. காவிரியாறு இவ்விடத்தில் தெற்கு நோக்கி ஓடுவது மிகச் சிறப்பான அம்சமாகும். தமிழகத்திலிருந்து மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் வருகை தரும் ஒரு அற்புத தலமாகும்.

புகைப்பட தொகுப்பு

  • அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம் - நுழைவாயில்
  • அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம் - முன் காட்சி
  • அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம் - ஜீவ சமாதி

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையம் அருகிலுள்ளது. திருச்சியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக கரூர் வந்தடையலாம்.

தொடர்வண்டி வழியாக

கரூர் நகரில் ரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

கரூர்-திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் உள்ளது.