மூடுக

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

துறைபற்றி

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே பொது சுகாதார துறைக்கென தனியாக ஒரு துறை 1923 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இத்துறை வாயிலாக, அரசு இத்துறையை மையமாக வைத்து நோய் தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை செய்து வருகிறது. மேலும் பல நோய்களை கையாண்டும் அவற்றினை இனி களத்தில் வராமல் தடுப்பதற்கு கண்காணிப்பு பணிகளை செம்மையாக செய்து வருகிறது. இத்துறை தடுப்பூசி திட்டம், சுகாதார திட்டம், நலக்கல்வி, கொள்ளை நோய், தொற்று மற்றும் தொற்றா நோய் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க ஏதுவாக களப்பணியினை செய்து நோயின் தன்மை, இறப்பு விகிதத்தினை மாநிலத்தில் குறைப்பதற்கு ஏதுவாக செயல்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமப்புறங்களில் 30000 மக்கள்தொகைக்கு(மலைப்பிரதேசம் அல்லாத) ஒன்றும், மலைப்பிரதேசங்களில் 20000 மக்கள் தொகைக்கு ஒன்றும் இயங்கி வருகிறது. கரூர் மாவட்டத்தில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு கட்டிடங்களிலும், 5 ஆரம்ப நகர்புற சுகாதார நிலையங்களில் 2 வாடகை இல்லாத கட்டிடங்களும், 3 வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. இது குறித்த நேரத்தில் நோய் கவனிப்பு கொடுக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் உட்கட்டமைப்பு:

159 துணை சுகாதார நிலையங்கள் கரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும் 15 துணை நகர்புற சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது. துணை சுகாதார நிலையங்கள் 5000 மக்கள்தொகைக்கு ஒன்றாக இயங்கி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களும் அரசு கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. துணை சுகாதார நிலையங்கள் அனைத்தும் கர்ப்பகால தாய்மார்களுக்கும், சிசு ஆரம்ப சிகிச்சைக்காகவும் ஒரு சிறந்த மையமாக இயங்கி வருகிறது. இதே போன்று நகர்புறங்களில் நகர்புற துணை சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது.

செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் விபரங்கள்

இங்கே சொடுக்குக(PDF 90 KB)

கரூர் மாவட்டம் தன்னார்வ ரத்த தான முகாம் 2022 (PDF 30 Kb)

தொடர்பு விபரம்:

துணை இயக்குநர்,
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம்,
இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் இணைப்பு வளாகம்,
கரூர் – 639007

தொலைபேசி: 04324-255340
மின்னஞ்சல்: dphkar@nic[dot]in