மூடுக

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டம். (பொது பிரிவு)L

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கல்வித்தகுதியினை பதிவுசெய்து தொடர் புதுப்பித்தலுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பதிவுதார்களுக்கு மூன்றாண்டுகளுக்கு உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டம்.(மாற்றுத்திறனாளி பிரிவு)

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கல்வித்தகுதியினை பதிவுசெய்து ஒரு வருடம் முடிவடைந்த மாற்றுத்திறனாளி பதிவுதார்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது.

தன்னார்வ பயிலும் வட்டம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது TNPSC SSC/RRB/IBPS/LIC EXAM (Combined Class) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வு மற்றும் மாதிரி வினாக்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம். வேலைவாய்ப்புத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை ஒளிப்பரப்பி வருகின்றது.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வருடம் இரண்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பிற்காக www.tnprivatejobs.tn.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தின் வாயிலாக கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், 21 துறைகளின் கீழ் பதிவு செய்துள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார்துறை வேலைவாய்ப்பு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 04324-223555