மூடுக

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

துறை பற்றி

மாநிலத்தின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை நிலைநிறுத்துவதில், தொழிலாளர் துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொழில் நல்லுறவுக்கு, பொறுப்புணர்வும், திறமைமிக்க தொழிலாளர்களும், முற்போக்கான நடைமுறைகளை பின்பற்றும் நிர்வாகமும் இன்றியமையாதவை ஆகும்.

தொழிலாளர் துறை தொழிற்தகராறுகள் சட்ட நடைமுறைகள் வாயிலாக நுட்பமான சமரச தலையீடுகளின் மூலம் தொழில் தாவாக்களை தீர்த்து வைத்து இணக்கமான சூழலை உருவாக்கிடும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் இலக்குடன் தொழிலாளர் துறை பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தொழில் நல்லுறவுகளை பேணிக்காக்கவும், தொழிலாளர் நலனை மேம்படுத்தவும் இத்துறை பல்வேறு சட்டங்களை அமலாக்கம் செய்துவருகிறது.

தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), கரூர் மாவட்ட அலுவலகத்தின் நிர்வாக அமைப்பு :

தொழிலாளர் துறையின் அலுவலக அமைப்பு

தொழிற்சாலைகள் மற்றும் தோட்டக்கலை தவிர வேறு எந்த நிறுவனங்களுக்கும் பொருந்தாத பல்வேறு தொழில் நுட்ப தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளர்கள். தொழிலாளர் துறை அதிகாரிகளில் கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், சரகம் 1, தொழிலாளர் உதவி ஆய்வாளர், சரகம் 2, மற்றும் முத்திரை ஆய்வாளர் (எடையளவுகள் முத்திரையிடுதல்) ஆகிய அதிகாரிகள் உள்ளனர். மேலும் 1985 ஆம் ஆண்டின் எடைகள் மற்றும அளவுகள் (அமலாக்கம்) சட்டத்தின் கீழ் இந்த அதிகாரிகள் எடைகள் மற்றும் அளவைகள் நடவடிக்கைகளுக்கான துணை கட்டுப்பாட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தொழிலாளர் உதவி ஆணையர்,(அமலாக்கம்) கரூர் மாவட்ட அதிகாரி

  • தொழிற்சாலைகள் சட்டங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் தவிர தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்களையும் ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.
  • சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளுதல்
  • பணியாளர் நிரந்தரப் படுத்துதல் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரி<./li>
  • ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் சான்று வழங்குதல் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுதல்.

தொழிலாளர் துணை ஆய்வாளர்

  • சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்.
  • பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முத்திரைப் பணி மேற்கொள்ளும் அலுவலர் (பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் எடைப்பாலங்கள்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள்

  • தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கடைகள் நிறுவனங்களை ஆய்வு மேற்கொள்ளும அலுவலர்கள் (தொழிற்சாலைகள் தவிர).
  • சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.

முத்திரை ஆய்வாளர்

  • எடையளவுக் கருவிகள் மற்றும் எடைக்கற்களை சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் முத்திரைப் பணி மேற்கொள்ளுதல்.

தொடர்பு விபரம்:

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ,
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம்,
234.பி.சன்னதி தெரு,
வெண்ணெய்மலை,
கரூர்- 639 006.
மின்னஞ்சல்: ilkarur2015@gmail[dot]com
அலைபேசி: 9445398754