மூடுக

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கரூர் மாவட்டம்

செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள்

அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு இத்துறை மூலம் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் மாணவ / மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள், வழங்கப்படுகிறது. தொழில்புரிவோரின் வாழ்க்கையை முன்னேற வழிவகுக்கும் வகையில் விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா சலவைப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு, நிலம் கையகம் செய்து விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. டாப்செட்கோ, டாம்கோ ஆகிய திட்டங்களின் கீழ் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தொழில் செய்ய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை திட்டங்கள்

 1. பள்ளிப் படிப்பு உதவித் தொகை
 2. பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை
 3. மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித் தொகை திட்டம்.
 4. பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்.
 5. தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம். 

  வருமானம் மற்றும் இதர தகுதிகள்

  1. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றை சாளர முறையில் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  2. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  3. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது (6-8 வகுப்பு = ரூ. 200, 9-10 வகுப்பு = ரூ. 250, 11-12 வகுப்பு = ரூ. 500).
  4. பி்.ந/மி.பி.ந. மாணவா்கள் முந்தைய இறுதி தோ்வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சீா்மரபினா் இன மாணவா்களுக்கு குறைந்த பட்ச நிபந்தனை இல்லை.
  5. கல்வி உதவித்தொகை மாணவா்களின் வங்கி கணக்கிற்கு ECS மூலம் வழங்கப்படும்.

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல்

 1. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்து வகுப்பு வரையிலான மாணவியா்களுக்கு ரூ. 500/-ம்,
 2. ஆறாம் வகுப்பு மாணவியா்களுக்கு ரூ. 1,000/-ம் வழங்கப்படுகிறது.
 3. பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 25,000/-க்குள் இருக்க வேண்டும்.
 4. கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவியா் பயில வேண்டும்.
 5. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் இனத்தை சார்ந்த கிராமப்புற பெண் குழந்தைகள் மட்டும் பயன்பெறுவா்.

விடுதிகள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
பி.ந. 10 6 16
மி.பி.ந. 23 9 32
மொத்தம் 33 15 48
 1. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பிலிருந்து 12-ம் வரையிலான பள்ளி மாணவ/மாணவியா்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியா்களும் சோ்த்துக் கொள்ளப்படுவா்.
 2. இவ்விடுதிகளில் சோ்வதற்கான படிவங்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா்/காப்பாளினிகளிடமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும்இலவசமாக கிடைக்கும்.
 3. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 4. விடுதி மாணவ/மாணவியா்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  1. ஆண்டிற்கு நான்கு செட் சீருடைகள்
  2. இலவச சாப்பாடு மற்றும் தங்குமிடம்
  3. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள்.
  4. பாய் மற்றும் போர்வை
  5. நூலகம் மற்றும் விளையாட்டு சாதனங்கள்.
  6. சோப்பு, பற்பசை, எண்ணெய் முதலியன மாதம் தோறும் இலவசமாக வழங்கப்படுகிறது.
  7. வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டையும் ஒரு நாள் சிக்கம்/மட்டன் வழங்கப்படுகிறது.

விலையில்லா மதிவண்டிகள் வழங்குதல்

 1. அரசு பள்ளிகள் /அரசு உதவிப்பெறும் பள்ளிகள் / பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் பி.ந./மி.பி.ந/சி.ப/சீம மாணவ/மாணவியா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
 2. பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ள விடுதியில் தங்கி அதே பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியா்கள் மட்டுமே மிதிவண்டிகள் பெற தகுதியில்லை.

விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்

 1. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்த சலவை தொழிலை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
 2. சலவைத் தொழில் செய்வோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

 1. பிந/மிபிந/சீம வகுப்பைச் சார்ந்த மகளிருக்கு மட்டும்.
 2. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
 3. தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 4. வயது 20 முதல் 45க்குள் இருத்தல் வேண்டும்.

விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல்

 1. நிலமற்ற வீடற்ற ஏழை பிந/மிபிந/சீம இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 2. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.

டாப்செட்கோ மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் பெயா் அதிக பட்ச கடன் தொகை ஆண்டு வட்டி விகிதம் திரும்ப செலுத்தும் கால அளவு
1. பொதுக்கால கடன் ரூ. 10.0 இலட்சம் ரூ. 5.00 இலட்சம்வரை 6%
ரூ. 5.00 முதல் 10.00 இலட்சம்வரை 8%
3/5 ஆண்டுகள்
2. பெண்களுக்கான புதிய பொற்கால திட்டம் ரூ. 1.00 இலட்சம் 5% 3/5 ஆண்டுகள்
3. மகிளா சம்ரித யோஜனா (சுய உதவிக்குழு) ஒரு உறுப்பினருக்கு
ரூ. 50,000/-
4% 3 ஆண்டுகள்
4. சிறுகடன் திட்டம்
(ஆண்களுக்கு)
ஒரு உறுப்பினருக்கு
ரூ. 50,000/-
5% 3 ஆண்டுகள்
5. சிறு குறு விவசாயிகளுக்கான நீா்பாசன கடன் ரூ. 1.00 இலட்சம் பின் நிகழ்வு மானியமாக, ஆழ்துளை கிணறு, சொத்து உருவாக்கப்பட்ட பின்னா கடன் தொகையில் 50% மானியம் வழங்கப்படுகிறது.
தகுதிகள்
 1. தனிநபா் கடன்
 2. சிறுகடன்
 3. கல்வி கடன்
 4. கறவை மாட்டுக்கடன்
 5. ஆட்டோ கடன்

சிறுபான்மையின மக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள். சொடுக்குக (PDF 2 MB)

மேலதிக தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியரக அறை எண். 108-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நோில் தொடா்பு கொள்ளலாம்.