ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும்.

உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

வருவாய்

  1. பிரிவு அ – தேர்தல் அலுவலக நடைமுறைகள், வருவாய்த்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், கிராம நிர்வாக அலுவலர்களின் பணியமைப்பு மற்றும் தபால் பகிர்மானம், தேர்தல் தொடர்பான செயல்முறைகள்
  2. பிரிவு ஆ – நில ஆக்கிரமிப்பு, இலவச வீட்டு மனைப்பட்டா
  3. பிரிவு இ – நில அளவை, பூமிதான நிலங்கள், இனாம் ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்தம்
  4. பிரிவு ஈ – சட்டம் ஒழுங்கு, குண்டாஸ், படைக்கலச் சட்டம் மற்றும் திரையரங்குகள் தொடர்பானது.
  5. பிரிவு உ – ஓய்வூதியம், சம்பளம், ஊதிய நிர்ணயம் பட்ஜெட் மற்றம் இதர செலவுகள்.
  6. பிரிவு எ – ஜமாபந்தி, நீர்ப்பாசனம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு
  7. பிரிவு ஏ – பதிவறை பராமரிப்பு, டி.என்.பி.எஸ்.சி, வருவாய் வசூல் சட்டம், நில வருவாய், விருதுகள், பொங்கல் வேஷ்டி சேலைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை
  8. பிரிவு ஜே – ஆயத் தீர்வை மற்றும் மதுபானம்
  9. பிரிவு கே – உணவுப் பெருள் வழங்கல் மற்றும் நியாய விலைக் கடை
  10. பிரிவு எல் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலன்
  11. பிரிவு எம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்
  12. பிரிவு என் – மக்கள் நலத் திட்டங்கள், திங்கள் தின கோரிக்கை மனுக்கள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் தனிப் பிரிவு மனுக்கள்
  13. பிரிவு எஸ் – இலங்கை அகதிகள் முகாம் பராமரிப்பு
  14. பிரிவு ட்டி – இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை
  15. பிரிவு யு – வழக்குகள் தொடர்பான கோப்புகள் பராமரிப்பு
  16. நில அளவை பிரிவு – நில அளவை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  1. திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  2. >திட்ட அலுவலர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) – மகளிர் திட்டம்
  3. நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) – வளர்ச்சி
  4. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) – கிராம பஞ்சாயத்துகள்
  5. உதவி இயக்குனர் (தணிக்கை) – தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு
  6. நேர்முக உதவியாளர் (சத்துணவு) – பள்ளி சத்துணவு திட்டம்