மூடுக

தோட்டக்கலை மற்றும் மற்றும் மலைப்பயிர்கள் துறை

செயல்பாடுகள்

கரூர் மாவட்டத்தில் 16000 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் வாழை, மரவள்ளி, முருங்கை, வெற்றிலை, கண்வலிக்கிழங்கு, மலர்ப்பயிர்கள் மற்றும் இதர காய்கறிப் பயிர்கள் போன்றவை முக்கிய தோட்டப்பயிர்களாகும்.

தோட்டக்கலைத்துறையின் முக்கிய குறிக்கோள் தரமான நடவுப் பொருட்கள், வீரிய ரக ஒட்டு ரக விதைகள், ஒட்டு செடிகள், பதியன்கள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் உயர் தொழில்நுட்பங்களான பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலைக்கூடாரம் முறையில் சாகுபடி செய்தல், பந்தல் முறையில் கொடி வகைகள் சாகுபடி, சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் நிலப்போர்வை அமைத்து சாகுடி செய்தல் போன்ற தொழில்நுட்பங்களை பயிற்சி மூலமாகவும் விழிப்புணர்வு முகாம் மூலமாகவும் விவசாயிகளிடம் எடுத்துரைத்து தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தி திறனை பெருக்குவதாகும்.

திட்டங்கள்

1.ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

  1. பரப்பு விரிவாக்க திட்டம்
    • காய்கறி பயிர்கள் சாகுபடி ( தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள்) அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு ஹெக்டேருக்கு 20,000 எண்கள் வழங்கப்படுகிறது
    • மா சாகுபடிக்கு – ஒரு ஹெக்டேருக்கு 100 ஒட்டுக்கன்றுகள் , எலுமிச்சை சாகுபடிக்கு – ஒரு ஹெக்டேருக்கு 555 எண்கள், கொய்யா சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு 277 பதியன்கள் வழங்கப்படுகிறது.
    • மலர் பயிர் சாகுபடி: மல்லிகை மற்றும் இக்ஸோரா பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 1600 கன்றுகள் வழங்கப்படுகிறது.
    • நறுமண பயிர்கள் சாகுபடி: மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 12000 நாற்றுகள் மற்றும் கறிவேப்பிலை நாற்றுகள் ஒரு ஹெக்டேருக்கு 2000 கன்றுகள் வழங்கப்படுகிறது.
  2. பரப்பு விரிவாக்க திட்டம்

  3. பாதுகாக்கப்பட்ட சுழலில் சாகுபடி
    • பசுமைக்குடில்: பசுமைக்குடில் அமைக்க 50% மானியம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.468 வீதம் வழங்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக ஒரு நபருக்கு 4000 ச.மீ வரை வழங்கப்படுகிறது.
    • நிழல்வலைக்கூடாரம்: நிழல்வலைக்கூடாரம் அமைக்க 50% மானியம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355. வீதம் வழங்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக ஒரு நபருக்கு 4000 ச.மீ வரை வழங்கப்படுகிறது.
  4. பந்தல் சாகுபடி
  5. பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பந்தல் சாகுபடி
    பந்தல் சாகுபடி
    பந்தல் சாகுபடி
    பந்தல் சாகுபடி
  6. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை
    • தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி செய்து தரம் பிரித்தல், சுத்தம் செய்தல் ஆகியவற்றிற்காக சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கு 50% மானியமாக ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறது.
    • வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு 50% மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூ.3,500 வீதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 முதல் 50 மெட்ரிக் டன் வரை வழங்கப்படுகிறது

2. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

  • வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் விதைகள் மற்றும் இடு பொருட்கள் 40% மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு கீரை மற்றும் கொத்தமல்லி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 மானியமாகவும், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடி வகைகள் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3750 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் அங்ககச்சான்றிதழ் பெறுவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது.
  • பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

3. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை பயன் பெறலாம். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பக்கவாட்டுகளை புதுப்பிப்பதற்கான மானியத்தையும் பெறலாம்

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்

4. மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் – ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணையம்.

  • தோட்டக்கலை பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.9200/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
  • நிரந்தர மண்புழு உரத் தொட்டி அமைப்பதற்கு ரூ.12,500/- மானியமாக வழங்கப்படுகிறது.
  • தேனீ வளர்ப்புக்கு ரூ.12800/- வீதம் ஒரு நபருக்கு 8 பெட்டிகள் மானியமாக வழங்கப்படுகிறது.
  • கால்நடை பராமரிப்பு: ஒரு கறவை மாடு / எருமை வாங்க ரூ.15,000/-மும், ஆடு/ செம்மறி ஆடுகள் வாங்க ரூ. 7,500/- (5 எண்கள்), கோழிகள் 10 எண்கள் வாங்க ரூ.3,000/- வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

5. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

கரூர் மாவட்டத்தில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள் மற்றும் தக்காளி பயிர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து இயற்கை பேரழிவுகள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றிலிருந்து ஏற்படும் இழப்பிற்காக அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

திட்டத்தில் சேர தகுதி பெறும் விவசாயிகள்

  • அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவி்க்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவா்கள்.
  • பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் கட்டாயம் சோ்த்துக் கொள்ளப்படுவா்.
  • பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். பின்வரும் இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்
  • விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு
  • புயல் / ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளில் ஏற்படும் இழப்பு.
  • விதை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட இயலாத நிலைமை மற்றும் நடவு பயிர் செய்ததன் இழப்பு காப்பீட்டுத்தொகை கடன் பெறும் விவசாயிகள் / கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை

அனைத்து திட்டங்களிலும் பயனடைய தோ்வு செய்யும் தகுதிகள்

  1. சொந்த நிலம் மற்றும் நீா் ஆதாரம் உள்ள அனைத்து உழவா்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  2. குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை பத்திரம் இருத்தல் வேண்டும்.
  3. நில ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலவரைபடம்.
  4. சிறுமற்றும் குறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியா் கையொப்பம்)

மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்திட கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

வ.எண் பெயர் மற்றும் பதவி வட்டாரம் கைபேசி எண்
தலைமையிட அலுவலர்கள்
1 ச.மணிமேகலை
தோட்டக்கலை துணை இயக்குநர்
கரூர் 9751052040
2 மோ.பிரேமா
தோட்டக்கலை உதவி இயக்குநர் (ந.பொ)
கரூர் 9750262060
3 ரா.நந்தினி
தோட்டக்கலை அலுவலர் (தொ.நு)
கரூர் 9788681095
வட்டார தோட்டக்கலை அலுவலர்கள்
4 பா.ராஜவேலு
தோட்டக்கலை உதவி இயக்குநர்
கரூர் 9751678794
5 மா.கவிதா
தோட்டக்கலை உதவி இயக்குநர்
தாந்தோணி 9790107117
6 த.தமிழ்செல்வி
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ)
அரவக்குறிச்சி 9843643170
7 த.அ.சாகுல் இம்ரான் அலி
தோட்டக்கலை உதவி இயக்குநர்
கிருஷ்ணராயபுரம் 9994629884
8 த.தமிழ்செல்வி
தோட்டக்கலை உதவி இயக்குநர்
க.பரமத்தி 9843643170
9 த.அ.சாகுல் இம்ரான் அலி
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ)
குளித்தலை 9994629884
10 பெ.தமிழ்செல்வி
தோட்டக்கலை உதவி இயக்குநர்
கடவூர் 9445117941
11 மோ.பிரேமா
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ)
தோகைமலை 9750262060

மேலும் இணையவழி தொடர்புக்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
தோட்டக்கலைத்துறை இணையதளத்திலும் திட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தோட்டக்கலை துணை இயக்குநர்,
கரூர்