மூடுக

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

அலுவலகம்

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் உறுதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த கருவியாக கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத காரியங்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதே கூட்டுறவு நிறுவனங்களின் முக்கிய நோக்கம் ஆகும். கூட்டுறவுத்துறையில் பொது மக்களுக்கு தேவையான நுகர்வோர் பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவைப்பிரிவு மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்டும் விளைப்பொருட்களை தகுதியான, உரிய விலைக்கு விற்பனை செய்கிறது. கரூர் மண்டலத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டு அலுவலர் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆவார்.

மாவட்ட அளவிலான கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகததின் பின்புறம் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. கரூர் மண்டலத்தில் கரூர் மற்றும் குளித்தலை சரகத் துணைப்பதிவாளர் அலுவலகம், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) கரூர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களின் விவரம் பின்வருமாறு : –

வ.எண். கூட்டுறவு நிறுவனங்களின் பெயர் கரூர் சரகம் குளித்தலை சரகம் மொத்தம்
1 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 1 1
2 மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் 1 1
3 மாவட்டக் கூட்டுறவு அச்சகம் 1 1
4 தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கம் 47 37 84
5 நகரக் கூட்டுறவு வங்கி 1 1 2
6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 2 1 3
7 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 1 1 2
8 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய கடன் சங்கம் 12 6 8
9 தொடக்க கூட்டுறவு பண்டகசாலை 1 1
10 நதிநீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் 2 1 3
11 மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை 1 4 5
மொத்தம் 70 51 121

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கும் சேவைகள் விவரம் :-

விவசாயிகள் மற்றும் ஏழை எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகிறது. பயிர்க்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியினை மானியமாக வழங்கியும், வேளாண் உற்பத்தியினை பெருக்கிட முதலீட்டுக்டகன் வழங்கியும், விவசாய விளைப்பொருட்களை உரிய விலை கிடைக்கும் வரை சேமித்து வைத்து விற்பனை செய்திடவும், விவசாய விளைப்பொருட்களை ஈடுதலாக கொண்டு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. உரம், இடுபொருட்கள் மற்றும் விதைகள் விநியோகம் செய்து வருகின்றது. மேலும், நகைக்கடன், சிறுவியாபாரக்கடன், வீட்டுவசதி கடன் போன்ற கடன்களை வழங்கி சமுதாய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

கரூர் மாவட்டத்தில் 84 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. வேளாண் சார்ந்த காரியங்களுக்கு வேளாண் கடன், விவசாய இயந்திரங்கள் கடன், நுண் நீர்ப்பாசனக் கடன், ஆடு வளர்ப்பு, கறவை மாடு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள், உரங்கள், சிறு விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கி சேவைகள் வழங்கியும் வருகின்றது. பண்ணை சாராக் கடன்களான வீட்டு வசதி கடன், சுயஉதவி குழுக்கடன் போன்ற கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 583 நியாய விலைக் கடைகளையும் செயல்படுத்தி வருகின்றது.

பயிர்க்கடன் :-

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயத்திற்கு மிக முக்கியமான நிதி பங்களிப்பை பயிர்க்கடனாக வழங்கி வருகின்றது. உரிய தவணை காலத்தில் பயிர்க்கடனை திருப்பி செலுத்திய விவசாய உறுப்பினர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 7 % வட்டியை மானியமாக அரசே செலுத்துகிறது. மேலும், பயிர்க்கடனுக்கான வட்டி விகிதம் 9 % சதவீதத்தில் இருந்து 7 % ஆக குறைக்கப்பட்டதால் மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் குறைவு ஏற்பட்ட 2 % வட்டித்தொகையினை தமிழ்நாடு அரசே கூட்டுறவுகளுக்கு அளிக்கின்றது.

முதலீட்டுக்கடன் :-

வேளாண் உற்பத்திக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான மூலதன உருவாக்கத்திற்காக முதலீட்டுக்கடன் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் சேவையின் விவரம்:-

வ.எண் வழங்கப்படும் கடன் / சேவை விவரம்
1 பயிர்க்கடன்
2 பொது நகைக்கடன்
3 கூட்டுப் பொறுப்புக்குழுக் கடன்
4 மத்தியக் காலக் கடன் ( தனி நபர் பிணையத்தின் பேரில்)
5 மத்தியக் காலக் கடன் ( அடமானத்தின் பேரில்)
6 நுண் நீர்ப்பாசனக் கடன்
7 மாற்றுத் திறனாளி கடன்
8 சுய உதவிக்குழு கடன்
9 டாப்செட்கோ கடன் ( பிற்படுத்தப்பட்டோர்)
10 டாம்கோ கடன் ( சிறுபான்மையினர்)
11 பொது சேவை மையம்

நகரக் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் விவரம் :-

கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலை நகர கூட்டுறவு வங்கிகள் நகர்ப்புறத்தினை செயல் எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. நகர வங்கிகளில் கீழ்க்கண்டுள்ள கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வ.எண் வழங்கப்படும் கடன் விவரம்
1 நகைக்கடன்
2 சில்லரை வியாபாரக் கடன்
3 சுய உதவிக்குழு கடன்
4 பண்ணைசாராக்கடன்
5 வீட்டு வசதி கடன்
6 வீடு அடமானக் கடன்
7 தொழில் முனைவோர் கடன்
8 அம்மா சிறுவணிக் கடன்
9 மகளிர் தொழில் முனைவோர் கடன்
10 வேலைபார்க்கும் மகளிர் கடன்
11 மகப்பேறு கடன்
12 டாப்செட்கோ, டாம்கோ கடன்

அம்மா மருந்தகம்:-

கூட்டுறவுத்துறையில் கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அம்மா மருந்தகம் துவக்கப்பட்டு 15% தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்து பொதுமக்கள் நலன் காக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றது.

பொது விநியோகத்திட்டம்

“அனைவருக்கும் உணவு” எனும் நிலையினை உருவாக்க தமிழ்நாடு அசரால் ஒரே சீரான விலை, ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யும் நோக்கத்திற்காக பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற வகையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதே ஒரே சீரான பொது விநியோகத் திட்டம் ( Universal PDS) ஆகும். தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் triple-A முறையில் அனைத்து பொருட்களும், மக்களுக்கு அருகிலேயே, குறைந்த விலையில் ( Availability, Accessibility and Affordability ) விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அரிசி வாங்கிட தகுதி பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.06.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 15 உட்பிரிவு (1).இன்படி தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உணவுப் பொருள் வழங்கலில் உள்ள குறைகளை களைய மாவட்ட குறைதீர் அலுவலரை நியமனம் செய்துள்ளது.

பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் பாகுபாடற்ற வகையில் ஒரே சீரான பொது விநியோகத் திட்டம் ( Universal PDS) – இன் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டம் பொது நகைக்கடன் தள்ளுபடி தகுதியான பயனாளிகள் பட்டியல்