புவியியல் மற்றும் சுரங்கத்துறை
கரூர் மாவட்டம் 18.03.2000 முதல் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கனிம நிர்வாக பணிகள் ஒரு துணை இயக்குநர், ஒரு உதவி புவியியலாளர் மற்றும் இரண்டு சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் (கனிமம்) அடங்கும். கனிமம் இருப்பு வைப்பதை பரிசோதிப்பது, மதிப்பீடு செய்வது, கனிமங்கள் எடுத்து செல்வதை கண்காணிப்பது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருவதாகும்.
துணை இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கம்) கனிம நிர்வாகப் பணிகளின் தொழில் நுட்ப தலைவராகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில், கனிம நிர்வாக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
துணை இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கம்) பணிகள் பின்வருமாறு:
- சிறு மற்றும் பெருகனிம விண்ணப்பதாரர்களின் உரிமம் / சுரங்க / குவாரி குத்தகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை தொழில்நுட்ப மதிப்பீடு அல்லது செயலாக்க உறுதிப்படுத்துதல்.
- விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கு முக்கிய இணைப்பாகவும் வழிகாட்டுதலாகவும் செயல்படுவது.
- சட்டவிரோத குவாரி மற்றும் கனிம வளங்களை இரகசியமாக அகற்றுவதை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தல் மற்றும் கனிம நிர்வாகத்தை கண்காணித்தல்.
- குவாரிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு நடைசீட்டு மற்றும் அனுப்புகைசீட்டு வழங்குவதன் மூலம் குத்தகைதாரர்கள் கனிமங்களை தங்களது குவாரிகளிலிருந்து எடுத்து செல்வதை முறைப்படுத்துதல்.
- குவாரி குத்தகைதாரர்களிடமிருந்து மாதாந்திர வருவாய், சீனியரேஜ் கட்டணம், Royalty கட்டணம் பெறுதல்.
- சட்ட விரோதமாக கனிமங்களை கடத்தி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்துதல்.
மாவட்ட ஆய்வு அறிக்கைகள்
வகை | இணைப்பு |
---|---|
Granite (பலவண்ண கற்கள்) | சொடுக்குக (3 MB) |
Gravel (கிராவல்) | சொடுக்குக (3 MB) |
Limestone (சுண்ணாம்பு கற்கள்) | சொடுக்குக (3 MB) |
Magnesite and Dunite (மேக்னசைட் மற்றும் டுனைட்) | சொடுக்குக (3 MB) |
Rough Stone (சாதாரண கற்கள்) | சொடுக்குக (3 MB) |
Quartz and Feldspar (குவார்ட்ஸ் மற்றும் ஃபெல்ஸ்பார்) | சொடுக்குக (4 MB) |
Sand (மணல்) | சொடுக்குக (7 MB) |
தொடர்பு விபரம்:
துணை இயக்குநர்,
புவியியல் மற்றும் சுரங்கத்துறை,
அறை எண். 302, மூன்றாம் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கரூர் – 639007.
தொலைபேசி: 04324-255113
மின்னஞ்சல்: mine[dot]tnkar@nic[dot]in, mine[dot]tnkar@gmail[dot]com