மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
துறை பற்றி
மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இத்துறை ஏற்படுத்தி வருகிறது.
சமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடுபடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது. ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழவேண்டும் என்பதை உறுதி செய்யவென அரசால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இந்தியாவில் உள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை பயன்படுத்த சம வாய்ப்பு அளிக்கிறது.
அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் பின்வருமாறு:
- அவயங்கள் மற்றும் அதன் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுத்தல்
- ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்
- மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்
- சிறப்புக் கல்வி அளித்தல்
- மறுவாழ்வுப் பணிகளுக்கென நிபுணர்களை ஆயத்தம் செய்தல் / தயார்படுத்தல்
- உதவி உபகரணங்களை வழங்குதல்
- கல்வி மற்றும் சுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல்
- தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல்
- சமூகப் பாதுகாப்பு
மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலகம், கரூர்
1997 வருடத்திலிருந்து மாற்று திறனாளி நலத்திற்காக மாவட்ட மாற்று திறனாளி நலத்துறை மாவட்ட ஆட்சியகரத்தில் செயல்பட்டு வருகிறது.
தொடர்பு விபரம்:
மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர்,
மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம்,
அறை எண்.7, தரைத் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கரூர் – 639007.
தொலைபேசி: 04324-257130
மின்னஞ்சல்: ddawokarur@gmail[dot]com